Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 06 , மு.ப. 09:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிருஷ்ணகிரியில் நகைக் கடையொன்றில் பணியாற்றி வரும் ஊழியர் ஒருவரிடம், மர்ம நபர்கள் சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ”தாம் சென்னை சைபர் கிரைம் பொலிஸ் பிரிவில் இருந்து பேசுவதாகவும், நீங்கள் தொலைபேசியில் சிறுவர்களின் ஆபாசப் படம் பார்த்ததாகப் புகார் வந்துள்ளது ” எனவும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இவ் வழக்கிலிருந்து தப்ப வேண்டுமானால் 10,000 ரூபாய் தர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர்.
இதனால் அச்சமடைந்த குறித்த நபர் ‘Phone Pay ‘ எனும் செயலி மூலம் பணத்தை அனுப்பியுள்ளார்.
இதனையடுத்து குறித்த மர்ம நபர்களை அவர் மீண்டும் தொடர்பு கொள்ள முயன்றபோது குறித்த தொலைபேசியின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அந்நபர் இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து போலி முகவரி கொடுத்து சிம்கார்ட் வாங்கிய தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 4 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025