Freelancer / 2023 ஒக்டோபர் 12 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு திடீரென ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. எல்லை பகுதியிலும் புகுந்து அந்த பகுதியில் இருந்த மக்களை தாக்கியது. இதில், பெண்கள், முதியவர்கள் என நூற்றுக்கணக்கானோர் படுகொலை செய்யப்பட்டனர். இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பாதுகாப்பு படையும் பதிலடி கொடுத்து வருகிறது.
இஸ்ரேலில் 18,000 இந்தியர்கள் உள்ளனர். அவர்களை மீட்க இந்திய மத்திய அரசும், வெளியுறவு துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இந் நிலையில், "ஆபரேஷன் அஜய்" மூலம் இஸ்ரேலில் உள்ள இந்தியர்களை மீட்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளது. இதுகுறித்து வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் தனது எக்ஸ் தளத்தில், "இஸ்ரேலில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவதற்கு வசதியாக “ஆபரேஷன் அஜய்” தொடங்கப்படுகிறது. அவர்களுக்காக சிறப்பு விமானங்கள் மற்றும் பிற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன. வெளிநாட்டில் உள்ள எங்கள் நாட்டினரின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்." என்று தெரிவித்துள்ளார். (https://shorturl.at/dghnv)
16 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
44 minute ago
2 hours ago
2 hours ago