Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 14, திங்கட்கிழமை
Mithuna / 2024 ஜனவரி 14 , மு.ப. 11:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்திக் கொள்ள இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன என்று மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
‘இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம்’ என்ற தலைப்பில் புது டெல்லியில் சனிக்கிழமை(13) நடைபெற்ற கருத்தரங்கில் அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
“அம்பேத்கர் சட்டமேதை மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்க முற்பட்டபோது அதனை எதிர்கொள்ள அம்பேத்கரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது. லண்டன் பொருளாதார கல்வி நிலையத்தில் அம்பேத்கர் தாக்கல் செய்த இந்திய ரூபாய் தொடர்பான ஆய்வறிக்கையின் அடிப்படையில் தான் 1935-ம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டது.
இப்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளது. நமது ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன. இதன் மூலம் அந்த நாடுகளுக்குப் பயணிப்போது அந்த நாட்டுப் பணம் அல்லது அமெரிக்கா டாலரைப் பயன்படுத்தாமல், இந்திய ரூபாயை பயன்படுத்திக் கொள்ள முடியும்” என தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
7 hours ago
13 Jul 2025
13 Jul 2025