2025 ஜூலை 23, புதன்கிழமை

இராணுவத்தைத் திருமணத்துக்கு அழைத்த காதல் ஜோடி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 22 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கேரளாவைச் சேர்ந்த ராகுல் - கார்த்திகா என்ற இருவர் தமது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு இந்திய இராணுவ வீரர்களுக்கு அழைப்பு விடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த இருவருக்கும் கடந்த 10ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது.  

இந்நிலையில் இந்திய எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள இராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில்” இராணுவ வீரர்களை தமது திருமணத்தில் கலந்து கொள்ளுமாறு இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.

 எனினும் அவர்களது திருமணத்தில் இந்திய இராணுவத்தினர் பங்கேற்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இது குறித்து அத்தம்பதியினர் ஒரு பதிவை தமது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளனர்.

குறித்த பதிவில்” தமது திருமண அழைப்பிதழை பதிவிட்டுள்ள தம்பதி அதில் இந்திய இராணுவத்தைக் குறிப்பிட்டு  "எப்போதும் எங்களைக் பாதுகாப்பாக காத்திடும் உங்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். உங்களால் தான் நாங்கள் அமைதியாக திருமணத்தை நடத்துகின்றோம். இத் திருமணத்தில் உங்களது வருகையையும் ஆசிர்வாதத்தையும் வேண்டுகின்றோம்" எனப் பதிவிட்டுள்ளனர்.

இப்பதிவு வைரலானதைத் தொடர்ந்து இந்திய இராணுவம் ராகுல் மற்றும் கார்த்திகாவுக்கு நன்றி தெரிவித்துள்ளதோடு, அவர்களது திருமணத்திற்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .