2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

இளம்பெண்ணை நம்பி விடுதிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம்

Editorial   / 2022 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

இளம் பெண்ணொருவரின் ஆசை வார்த்தைகளை நம்பி, அப்பெண் தங்கியிருந்த விடுதிக்குச் சென்ற இளைஞனுக்கு நேர்ந்த விபரீதம் தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தில் இளம்பெண் ஒருவர் வாலிபரிடம் ஆசை வார்த்தை பேசி விடுதிக்கு அழைத்து அங்கு அவரை கட்டிவைத்து அடித்து பணம் பறித்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தில்   34 வயதானவர் பாதிக்கப்பட்டுள்ளார். இவர் நர்சிங் சேவைகளுக்கான தொழில் நடத்தி வருகிறார். சில வாரங்களுக்கு முன்னர் இவரிடம்   வயது இளம்பெண் தனக்கு நர்ஸ் வேலை வேண்டும் எனத் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டுள்ளார். பின்னர்  அந்த நபரிடம் அப்பெண் அடிக்கடி தொடர்பு கொண்டு இனிக்க இனிக்க பேசி நம்பிக்கையை பெற்றுள்ளார். தொடர்ந்து தனக்கு அவசரமாக பணம் தேவைப்படுகிறது எனக் கூறியுள்ளார்.

பணத்தை ஆன்லைன் மூலம் அனுப்புகிறேன் என்றதற்கு, இல்லை, இல்லை நேரில் தர வேண்டுமென அப்பெண் வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து  எர்ணாகுளம் பகுதியில் உள்ள விடுதியில் தங்கியிருந்த அப்பெண்ணை  சந்திக்க பணத்துடன்  ஓகஸ்ட் 8 ஆம் திகதி சென்றுள்ளார்  

அந்த விடுதியில் தங்கியிருந்த அப்பெண்ணின் கணவன்,  உறவினர்கள் மூவர்   சரமாரியாக தாக்கி கைகால்களை கட்டிப்போட்டு அடித்துள்ளனர்.

அந்த இளைஞரிடம் இருந்த தங்க சங்கிலி, மோதிரம், செல்போன் மற்றும் ரூ.5,000 பணத்தை பறித்துள்ளனர். அத்தோடு விடாமல் இந்த விவகாரத்தை சமூக வலைத்தளத்தில் போட்டு உன்னை அவமானப்படுத்தி விடுவேன் என மிரட்டி கூகுள் பே மூலம் ரூ.30,000 தொகையை அனுப்ப வைத்துள்ளனர்.

பணம் நகைகளை பறித்தப்பின்னர் அவரை அங்கேயே விட்டுவிட்டு தப்பியோடியுள்ளனர். முதலில் அவமானம் தாங்காமல் இந்த விவகாரத்தை பாதிக்கப்பட்ட நபர் வெளியே சொல்லவில்லை. பின்னர் மனம் மாறி அவர் காவல்துறையை தொடர்பு கொண்டு விவரத்தை கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து பொலிஸார் சகலரையும் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X