A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 18 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
அசன்சோல்,
திரிணாமுல் காங்கிரசை ஆட்சியில் இருந்து இறக்குவதுடன், மாபியா ராஜ்யத்தையும் நீக்கி விடும். அதுதான் நீங்கள்அளிக்கும் வாக்கின் வலிமை என பிரதமர் மோடி உரையாற்றினார்.
மேற்கு வங்காள மாநில சட்டசபை தேர்தலையொட்டி, அசன்சோல் நகரில் நேற்று நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் பிரசார கூட்டத்தில்கலந்துகொண்ட பிரதமர் மோடி தொடர்ந்தும் கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
வங்காள புத்தாண்டுக்கு பிறகு இதுதான் எனது முதல் பொதுக்கூட்டம். 4 கட்ட தேர்தல்கள் முடிந்தநிலையில், திரிணாமுல் காங்கிரஸ் பயந்து போயுள்ளது. பிணங்களை வைத்து மம்தா பானர்ஜி அரசியல் நடத்துகிறார். மே 2ஆம் திகதி,மம்தா பானர்ஜி, ‘முன்னாள் முதலமைச்சர் ’ என்ற சான்றிதழை பெற்று விடுவார்.
மேற்கு வங்காளத்துக்கு தேவை இரட்டை என்ஜின் அரசுதான். வளர்ச்சியை தடுக்கும் அரசு அல்ல. கடந்த 10 ஆண்டுகளாக, வளர்ச்சியை தடுத்து அவர் துரோகம் செய்துள்ளார்.
மத்திய அரசின் வளர்ச்சி திட்டங்களுக்கும், மேற்கு வங்காள மக்களுக்கும் இடையே அவர் சுவர் போல் நின்று கொண்டார். இதனால், மக்களுக்கு கிடைக்க வேண்டிய பலன்களை பறித்துக்கொண்டார்.
மக்களுக்கு ரூ.5 இலட்சம் வரை இலவச மருத்துவ காப்பீட்டை அளிக்க மத்திய அரசு முன்வந்தது. ஆனால், மம்தா சுவராக நின்று கொண்டார். முத்தலாக்கில் இருந்து முஸ்லிம் பெண்களை விடுவிக்க மத்திய அரசு சட்டம் இயற்றியது. மம்தா கோபம் அடைந்தார்.
19 minute ago
23 minute ago
37 minute ago
46 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
23 minute ago
37 minute ago
46 minute ago