Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Freelancer / 2024 மே 10 , மு.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த மகேஷ் (33) என்பவரின் உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்ட நிலையில், 7 பேருக்கு மறுவாழ்வு கிடைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மணலி புதுநகர் எழில் நகரை சேர்ந்தவர் மகேஷ். இவர் மின் சக்தி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 5ஆம் திகதி மகேஷ் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்கு திரும்பிகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று அவர் மீது மோதி உள்ளது.
இதில் கீழே விழுந்த மகேஷின் தலையில் பலமாக அடிபட்டதையடுத்து அங்கிருந்தவர்கள் உடனடியாக மகேஷை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்ந நிலையில் கடந்த 7ஆம் திகதி அவர் மூளை சாவு அடைந்தார்.
இதனால் அவரது உறவினர்கள் அவரது உடல் உறுப்புகளை தானம் கொடுக்க முன் வந்த நிலையில், அவரது உடலில் இருந்து எடுக்கப்பட்ட கல்லீரல், இரண்டு சிறுநீரகம், இதய வால்வு, தோல், இரண்டு கண்கள் என மொத்தம் 7 உறுப்புக்கள் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் 5 நோயாளிகளுக்கும், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் 2 நோயாளிகளுக்கும் பொருத்தப்பட்டது.
விபத்தில் இதயம் மற்றும் நுரையீரல் பாதிக்கப்பட்டிருந்ததால் அதனை பயன்படுத்த முடியாமல் போனது. மகேஷின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதில் சுமார் 7 பேர் மறுவாழ்வு பெற்றுள்ளனர். இந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
28 minute ago
34 minute ago