Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஒக்டோபர் 03 , மு.ப. 09:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
உத்தர பிரதேச மாநிலம், கான்பூா் மாவட்டத்தில் நேற்று முன்தினம் (01) உழவு இயந்திரமொன்று குளமொன்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 27 போ் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 50 க்கும் மேற்பட்டோரை ஏற்றிக் கொண்டு கோயில் திருவிழாவுக்குச் சென்ற உழவு இயந்திரமே, இவ்வாறு கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
இவ்விபத்தில் 27 போ் உயிரிழந்தனா் எனவும், 22 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவ்விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு 2 லட்சம் ரூபாயும் , படுகாயமடைந்தவா்களுக்கு 50,000 ரூபாயும் இழப்பீடாக வழங்கபடும் எனத் தெரிவித்துள்ளார்.
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025