A.K.M. Ramzy / 2021 ஜூன் 03 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோவை:
தமிழகத்தில் முழு ஊரடங்கை அரசாங்கம் விலக்கினாலும், கோவையின் நிலையைக் கருத்தில் கொண்டு, இங்கு மட்டும் நீடிக்க வேண்டியது அவசியமாகவுள்ளதென தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக, தமிழகத்தில் கொரோனா பரவலில் கோவை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது; உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. மாநிலம் முழுவதும் தொற்று பரவுவது குறைந்து வந்தாலும், கோவையில் தினமும் மூன்றாயிரத்துக்கும் அதிகமானவர்கள், தொற்றினால் பாதிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
கோவையில் இரண்டு அரச மருத்துவமனைகள் மற்றும் 20 தனியார் ஆய்வகங்கள் என மொத்தம் 22 ஆய்வகங்களில் தினமும் 17 ஆயிரத்து 200 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தும் அளவுக்கு அதிகபட்ச திறன் உள்ளது. ஆனாலும் தினமும் மாவட்டத்தில், 12 ஆயிரத்துக்கும் குறைவான அளவிலேயே பரிசோதனை நடத்தப்படுகிறது. எடுக்கப்படும் பரிசோதனையில், 30 சதவீதம் அளவுக்கு தினமும் பாதிப்பு உள்ளது.
16 minute ago
24 minute ago
51 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
24 minute ago
51 minute ago
54 minute ago