2026 மே 04, திங்கட்கிழமை

ஊழியர்களை தேடும் பணி

A.K.M. Ramzy   / 2021 மே 19 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெள தே புயலின்போது மூழ்கிய பி305 கப்பலில் இருந்த 89 ஓஎன்ஜிசி நிறுவன ஊழியர்களை இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது.

அந்த கப்பலில் பயணம் செய்த 273 பேரில் 184 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மணிக்கு 150 கி.மீற்றர் வேகத்தில் புயல் வீசியபோது அந்த கப்பல் கடலில் அடித்துச் செல்லப்பட்டது.

அது பின்னர் மும்பை அருகே மூழ்கியிருந்தது கண்டுபிடிக்கப் பட்டது. கடலில் எண்ணெய் எடுப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த வகை பார்ஜ் கப்பல்கள் பயன்படுத்தப்படும். புயல் காரணமாக அதன் நங்கூரம் வலுவிழந்து நீங்கியதால் இந்த இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் புதன்கிழமை பேசிய இந்திய கடற்படை செய்தித்தொடர்பாளர், பி305 கப்பலில் இருந்தவர்களில் 184 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களை ஐஎன்எஸ் கொச்சி மற்றும் ஐஎன்எஸ் கொல்கத்தா ஆகிய கடற்படை கப்பல்கள் மும்பைக்கு அழைத்துச் சென்றுள்ளன என்று கூறினார். மீட்புப் பணிகளில் ஐஎன்எஸ் தேக், ஐஎன்எஸ் பெட்வா, ஐஎன்எஸ் பீஸ், பி8ஐ ரக சிறிய ரக விமானம் மற்றும் ஹெலிகொப்டர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், குஜராத் புயல் தாக்கத்தை இந்திய பிரதமர் நரேந்திர மோதி வான் வழியாக பார்வையிட்டு வருகிறார். குஜராத் மற்றும் டியுவிலும் அவர் ஆய்வு செய்து வருகிறார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .