Freelancer / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சினிமாக்களில் வரும் காமெடி காட்சிகளில் வைத்தியர்கள் பல்வேறு விதமாக பணம் பிடுங்குவதும் நூதனமாக சிகிச்சை அளிப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதே போன்று சம்பவம் ஒன்று ஆந்திர மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஆந்திர மாநிலம் ஐதராபாத்தில் ஆயுர்வேத வைத்தியர் ஒருவர் தனியாக கிளினிக் நடத்தி வருகிறார். இவரிடம் அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தலைவலி மற்றும் நரம்பு பகுதிகளில் வலி இருப்பதாக சிகிச்சைக்கு சென்றுள்ளார்.
அப் பெண்ணை பரிசோதித்த அந்த வைத்தியர் மருந்துகளை பரிந்துரை செய்வதற்கு பதிலாக அந்த பெண்ணிடம் எலுமிச்ச பழங்களையும் ஒரு சிறிய பையில் சாம்பலையும் கொடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து அமாவாசை தினத்தில் பெண்ணை பூஜைக்கு வருமாறும் அழைத்து பூஜை பொருட்கள் என கூறி வீட்டிற்கு வாங்க வேண்டிய மளிகை பொருட்களின் பட்டியலை அந்த பெண்ணிடம் கொடுத்துள்ளார்.
மேலும், அந்த பெண்ணிடம் இருந்து ரூ. 50 ஆயிரம் பணத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் இதுகுறித்து அவரது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் பொலிஸில் புகார் அளித்ததை தொடர்ந்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
12 minute ago
18 minute ago
19 minute ago
24 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
18 minute ago
19 minute ago
24 minute ago