A.K.M. Ramzy / 2021 ஜூன் 07 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
புதுடில்லி:
கொரோனா தொற்றின் பொருளாதார விளைவுகளால் நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள் என காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக காங்கிரஸ் எம்.பி., ப.சிதம்பரம் டுவிட்டரில் பதிவிட்டதாவது: கொரோனா பெருந்தொற்றின் பொருளாதார விளைவுகளை மத்திய அரசு கையாண்ட விதத்தை நான் தொடர்ந்து விமர்சித்து வருகிறேன். இந்தப் பெருந்தொற்று கீழ் அடுக்கு நடுத்தர மக்களை (lower middle class) எப்படிப் பாதித்திருக்கிறது என்று ஒரு அறிவு பூர்வமான ஆய்வை ஒரு வல்லுநரின் துணையுடன் நடத்தினேன்.
1,004 நபர்கள் ஆய்வில் கலந்து கொண்டார்கள். கடந்த 14 மாதங்களில் தங்கள் மாத வருமானம் மற்றும் ஊதியம் குறைந்திருப்பதாக 880 நபர்கள் பதிலளித்தார்கள்.
758 நபர்கள் தங்கள் குடும்பச் செலவு கூடியிருப்பதாகச் சொன்னார்கள். 725 நபர்கள் தங்கள் சேமிப்பிலிருந்து பணம் எடுத்திருக்கிறார்கள். 329 நபர்கள் தங்கள் உடமைகளை விற்றனர் அல்லது அடமானம் வைத்திருக்கிறார்கள்; 702 நபர்கள் கடன் வாங்கியிருக்கிறார்கள். இந்தக் கீழ் அடுக்கு நடுத்தர மக்கள் ஏழைகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
8 hours ago