2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஐஸ்கிரீம்க்கு பதிலாக ஆணுறை பக்கெட்டுகள்

Editorial   / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

வாடிக்கையாளர் ஒருவர் ஐஸ்கிரீம்,சிப்ஸ் போன்றவற்றை முன்பதிவு  செய்த நிலையில் அவருக்கு ஆணுறை பக்கெட்டுகள் அனுப்பபட்டுள்ளன.இது தொடர்பாக வாடிக்கையாளரிடம் கோவையில் உள்ள    நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

கோவையைச் வாடிக்கையாளர் குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸ் ஆகியவற்றவை முன்பதிவு செய்தார். இந்நிலையில், டெலிவரி இளைஞன் மூலம்  வீட்டிற்கு கொண்டுவந்து பொதி கொடுக்கப்பட்டுள்ளது. ​பொதியை   திறந்து பார்த்த போது  வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. அதில் சிப்ஸ், ஐஸ்கிரீமிற்கு பதிலாக இரண்டு ஆணுறை பாக்கெட்டுகள் அனுப்பப்பட்டிருந்தன.  இது குறித்து தனது  ட்விட்டர் பக்கத்தில் அந்த  நிறுவனத்தை டேக் செய்து பதிவிட்டார்.

இதனையடுத்து தவறு நடந்ததை உணர்ந்த அந்த நிறுவனம்  மன்னிப்பு கேட்டது. மேலும் வாடிக்கையாளர் செலுத்திய தொகையினை உடனடியாக அவரது கணக்குக்கு  திருப்பி அனுப்பியதுடன் , ஆணுறை பக்கெட்டுகளையும் திரும்ப பெற்றுக்கொண்டது.

 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X