Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 நவம்பர் 01 , பி.ப. 06:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா மந்தநிலையின் விளிம்பில் இல்லாததாலும் ஒபெக் பிளஸ் கொள்கைகளால் நாடு மோசமாகப் பாதிக்கப்படப் போவதில்லை என்பதாலும், இந்தியாவுக்கு ‘அதிர்ஷ்டம்’ என்று இந்தியப் பொருளாதார நிபுணர் டொக்டர் சரண் சிங் தெரிவித்தார்.
ஒட்டுமொத்த விலை காரணமாக இந்தியா பாதிக்கப்படலாம் என்றபோதும், தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற உண்மையையும் பொருளாதார நிபுணர் ஏஎன்ஐ செய்திச் சேவையிடம் வலியுறுத்தினார்.
மேற்கு நாடுகளில் ஏற்றுமதி உறிஞ்சப்படாவிட்டால், குறிப்பாக உலகம் மந்த நிலையில் இருந்தால், இந்தியா தன்னை முழுவதுமாக தனிமைப்படுத்த முடியாது என்றும் ஓர் எச்சரிக்கையை வெளியிடும் போது அவர் சுட்டிக்காட்டினார்.
ஒபெக் நாடுகளால் மசகு எண்ணெய் உற்பத்தியை குறைப்பதற்கான அறிவிப்பு அண்மையில் வெளியானது.
இது மேற்கு நாடுகளுடன் அதன் மிகப்பெரிய மோதல்களில் ஒன்றாகும், ஏனெனில் அமெரிக்க அரசாங்கம் ஆச்சரியமான முடிவை குறுகிய பார்வை என்று அழைத்தது.
அமெரிக்கர்கள் தங்கள் இடைக்காலத் தேர்தல் வரவிருப்பதால் இது குறுகிய பார்வை என்று கூறியுள்ளனர் எனவும் சவூதி அரேபியா மற்றும் ஒபெக் நாடுகளும் தங்களது உள்ளூர் தொகுதிகள் குறித்து கவனம் செலுத்துவதாகவும் பொருளாதார நிபுணர் ஒருவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எண்ணெய் வளம் வருங்கால சந்ததியினருக்கு சொந்தமானது என்பதில் தெளிவாக உள்ள ஒபெக் நாடுகளின் பிரதிநிதிகள், சிறந்த விலை பெறாவிடின் எதிர்கால மற்றும் கடந்த தலைமுறைக்கு தாங்கள் பதிலளிக்க வேண்டியவர்கள் என்று தன்னிடம் குறிப்பிட்டதாக குறித்த நிபுணர் தெரிவித்தார்.
உலக பொருளாதாரம் மந்த நிலையில் உள்ளதாகவும் எண்ணெய்த் தேவை குறைந்தால் எண்ணெய் விலை மீண்டும் குறைவது இயல்பு என்றும் டொக்டர் சரண் சிங் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்று நிலைமையை மோசமாக்கியதாகவும் ரஷ்யா - உக்ரைன் போர் ஒரு தூண்டுதலாக அமைந்ததாகவும் தெரிவித்த அவர், ஒரு நாள் இந்த நிலைமை நடந்தே ஆகவேண்டும் என்றார்.
பெடரல் ரிசேர்வ் கையிருப்பு 2008 முதல் 2012 வரை நான்கு மடங்கு அதிகரித்ததாகவும், பின்னர் இரண்டு ஆண்டுகளில் இரட்டிப்பாகியதாகவும் ஏஎன்ஐயிடம் டொக்டர் சரண் சிங் கூறினார்.
ஒபெக்குக்கு அதன் சொந்த காரணங்கள் உள்ளதாகவும் மேலும் அவர்கள் சப்பிரைமின் கீழ் தொடங்கப்பட்ட கொள்கையின் வீழ்ச்சிக்காக அமெரிக்காவில் தொடங்கிய வட்டி விகித சுழற்சி நாடுகளைத் திறக்க வேண்டும் என்று கூறுவதாகவும் தெரிவித்த அவர், எனவே, இரு தரப்பிலும் சாதக, பாதகங்கள் உள்ளன என்றார்.
உக்ரைன் மீதான புட்டினின் படையெடுப்பின் தொடர்ச்சியான எதிர்மறையான தாக்கத்தை உலகப் பொருளாதாரம் கையாளும் போது உற்பத்தி ஒதுக்கீட்டைக் குறைப்பதற்கான ஒபெக் பிளசின் குறுகிய பார்வை முடிவால் பைடன் ஏமாற்றமடைந்தார் என்று வெள்ளை மாளிகை முன்னதாக ஓர் அறிக்கையில் குறிப்பிட்டது.
அடுத்த மாதம் மூலோபாய பெட்ரோலிய இருப்புக்களில் இருந்து மேலும் 10 மில்லியன் பீப்பாய்களை விடுவிக்க எரிசக்தி துறைக்கு பைடன் உத்தரவிட்டதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
47 minute ago
50 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
50 minute ago
4 hours ago