2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

ஒப்பாரிப் போராட்டத்தால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 09:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஞ்சிபுரம் மாவட்டம் அருகே உள்ள பரந்தூரில், புதிய விமான நிலையமொன்று அமைக்கப்படவுள்ளதாகவும், இதன் காரணமாக பரந்தூர், ஏகனாபுரம், நாகபட்டு,நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமப்  பகுதிகளில் உள்ள நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்புதிய விமானம் நிலையம் குறித்த அறிவிப்பு வெளியான நாளில் இருந்து, அக்கிராம மக்கள் தினந்தோறும் பல்வேறு விதமான நூதனப்  போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

அந்தவகையில் 63ஆவது  நாளான  நேற்று(28)  கலந்து கொண்ட முதியவர்கள் மற்றும் பெண்கள் ”எங்களது ஊரினை விட்டு நாங்கள் வெளியேற மாட்டோம், விவசாயம் வேண்டும், விமான நிலையம் வேண்டாம்,எனக்  கூறி கண்ணீர் மல்கத்  தங்களது தலைகளில் அடித்துக்கொண்டு  ஒப்பாரி வைத்துப்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X