Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஒக்டோபர் 16 , பி.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியாவில் ஒன்லைன் சில்லறை விற்பனை தளங்கள், செப்டம்பர் 22 முதல் 30 வரையிலான காலகட்டத்தில் 5.7 டொலர் பில்லியன் (சுமார் ரூ. 40,000 கோடி) மதிப்புள்ள பண்டிகை விற்பனையை எட்டியுள்ளதாகவும் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையிலான வலுவான 27 சதவீத வளர்ச்சி என்றும் ஓர் அறிக்கை காட்டியது.
அலைபேசிகள், மொத்த விற்பனை மதிப்பில் 41 சதவீத பங்களிப்போடு சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றன என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ரெட்சீர் ஸ்டெர்ஜி கென்ஸ்டல்ஸ்டன்ஸின் அறிக்கை தெரிவிக்கிறது.
பண்டிகை விற்பனையின் முதல் வாரத்தில் வாங்குபவர்களின் எண்ணிக்கை 24 சதவீதம் (ஆண்டுக்கு) அதிகரித்துள்ளதுடன், 65 சதவீத நுகர்வோர் அடுக்கு 2 மற்றும் நகரங்களில் இருந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் குழுமம் (பிளிப்கார்ட், மைந்ரா மற்றும் ஷொப்சி) மொத்த விற்பனை மதிப்பில் 62 சதவீத சந்தைப் பங்குடன் சந்தையில் தொடர்ந்து முன்னிலை வகித்த அதேவேளை, மீஷோ ஓர்டர் அளவு (சந்தை பங்கில் 21 சதவீதம்) அடிப்படையில் இரண்டாவது இடத்தை பிடித்தது.
மொத்த விற்பனை மதிப்பில் 41 சதவீத பங்களிப்பை அலைபேசிகள் அளிப்பதுடன், ஒரு மணி நேரத்திற்கு 56,000 மொபைல்கள் விற்பனையாகின்றன என்றும் கடந்த பண்டிகை கால விற்பனையை விட 48 சதவீதம் வளர்ச்சியடைந்துள்ளது என்றும் ரெட்சீர் நிறுவனத்தின் இணை பங்காளர் சஞ்சய் கோத்தாரி தெரிவித்தார்.
மேலும், பண்டிகை வாரத்தில் ஒன்லைனில் கொள்வனவு செய்பவரின் செலவு 3 சதவீதம் ஓரளவு அதிகரித்துள்ளது என்று அறிக்கை குறிப்பிடுகிறது.
முதல் பண்டிகை விற்பனையின் முதல் நான்கு நாட்களில், இந்தியாவின் இ-வர்த்தக தளங்கள் ரூ.24,500 கோடி (கிட்டத்தட்ட 3.5 பில்லியன் டொலர்) வசூலித்துள்ளன.
மொத்த தினசரி சராசரி மொத்த விற்பனை மதிப்பு 5.4 மடங்கு உயர்ந்ததால், கிட்டத்தட்ட 55 மில்லியன் நுகர்வோர், முதல் நான்கு நாட்களில் ஒன்லைன் கொள்வனவில் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளி வரையிலான முழுப் பண்டிகை மாதத்தில் 11.8 பில்லியன் டொலர் மதிப்புள்ள மொத்த வணிகப் பொருட்களின் மதிப்பு இருக்கும் என்று பெங்களூருவைச் சேர்ந்த ரெட்சீர் கணித்துள்ளது.
5 hours ago
26 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
26 Jul 2025