Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 12 , பி.ப. 10:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கேரளாவில் கஞ்சா போதைக்கு அடிமையாக்கி பள்ளி மாணவிகளை பலாத்காரம் செய்த சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் கண்ணூரில் உள்ள தனியார் பள்ளியில் 16 வயது மாணவி ஒன்பதாம் வகுப்பில் அண்மையில் சேர்ந்துள்ளார். சில நாட்களில் மாணவியின் நடவடிக்கையில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. மாணவியின் உடல் அடிக்கடி சோர்வடைந்து முகம் களையிழந்து காணப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவியிடம் பெற்றோர் கேட்டபோது தொடக்கத்தில் எதுவும் சொல்லாமல் இருந்த மாணவி காலப்போக்கில் கதறி அழுது அதிர்ச்சியான தகவலை பெற்றோரிடம் பகிர்ந்தார்.
அதாவது, மாணவி கஞ்சா பிடிக்க பழகிவிட்டதாகவும், அதை நிறுத்தமுடியாமல் தவித்து வருவதாகவும் கூறினார். இதனால், பதறிப்போன பெற்றோர் மாணவியை போதை பழக்கத்தில் இருந்து மீளும் மையத்தில் சேர்த்துள்ளனர். அங்கு அவர் பத்து நாட்கள் தங்கினார்.
இதற்கிடையே, கஞ்சா பழக்கம் எப்படி வந்தது? யார் வாங்கி கொடுத்தது என்பதை குறித்து மாணவியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அதில், மாணவியின் வகுப்பில் படிக்கும் 16 வயது சிறுவனிடம் நட்பாக பழகினேன். கஞ்சா புகைத்தால் மன அழுத்தம் நீங்கும் எனக்கூறி முதன்முதலில் எனக்கு கஞ்சா புகைக்க சொல்லி கொடுத்தான். அப்போது, நான் மயங்கிவிட்ட பிறகு என்னிடம் அவன் தவறாக நடந்துகொண்டான்.
அதன் பிறகு எனக்கு கஞ்சா பிடிக்க ஆசை தொற்றிக்கொண்டது. தொடர்ந்து அவன் எனக்கு கஞ்சா வாங்கி கொடுப்பான். நான் கஞ்சா போதையில் இருக்கும் போதெல்லாம் என்னிடம் பாலியல் உறவு வைத்துக்கொண்டான் என அந்த மாணவி கூறியது பெற்றோருக்கு பேரிடியை கொடுத்தது. ஆனால், மாணவியின் பெற்றோர் இதுகுறித்து வெளியில் சொல்லாமல் இருந்த நிலையில் விஷயம் எப்படியோ மீடியாவில் கசிந்துவிட்டது. அதன் பிறகு உண்மையை பெற்றோர் பொலிஸில் கூறினர்.
பொலிஸார் மாணவியிடம் விசாரித்தபோது, அந்த மாணவன் இச்சிறுமியை மட்டுமல்லாமல் அதே பள்ளியில் படித்து வரும் 11 மாணவிகளை கஞ்சா போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்துள்ளதாக அந்த மாணவி தெரியப்படுத்தினார். இதனால் அதிர்ந்துபோன பொலிஸார் பள்ளிக்கு சென்று அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி அவனை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
இதற்கிடையில், கேரள மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் (எஸ்சிபிசிஆர்) பள்ளி, காவல்துறை மற்றும் கல்வித் துறையிடம் அறிக்கை கேட்டுள்ளது. மேலும், அறிக்கையை 15 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளது.
தற்போது அந்த மாணவன் சிறார் சிறையில் இருந்து ஜாமீனில் வெளிவந்துள்ளான். மாணவனால் பாதிக்கப்பட்ட மாணவிகள் யாரேனும் இருந்தால் தைரியமாக புகார் கொடுக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
30 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
1 hours ago