Editorial / 2023 ஜூன் 18 , மு.ப. 10:45 - 0 - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய அலைபேசியை பறித்தமையால், கணவனின் அந்தரங்க உறுப்பில் கொதிக்கும் எண்ணெயை அவரது மனைவி ஊற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசம் குவாலியர் கம்பம் காவல் நிலையத்துக்கு உட்பட்ட மாதவி நகரைச் சேர்ந்தவர் சுனில் குமார், அவர் வங்காள தேசம் டாக்காவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார், இவரது மனைவி பாவனா. .
சில நாட்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்த சுனிலிடம் பக்கத்து வீட்டுப் பெண்ணொருவர் நீங்கள் சென்ற பிறகு உங்கள் மனைவி என் கணவருடன் நீண்ட நேரம் பேசுகிறார் என்று புகார் அளித்தார்.
இதுபற்றி சுனில் மனைவியிடம் விசாரித்த போது, நான் பேசவில்லை என்று கூறியுள்ளார். சமீபத்தில், சுனில் வீட்டிற்கு வந்தபோது, பாவனா அந்த இளைஞனிடம் அலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அந்த இளைஞனிடம் பேசக்கூடாது என மனைவியை எச்சரித்தார் ஆனால் பாவனா கேட்கவில்லை. இதனால் மிகவும் வெறுப்படைந்த சுனில், பாவனாவின் அலைபேசியை எடுத்து வைத்துக்கொண்டார்.
இதையடுத்து இரவு 2 மணியளவில் கணவர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து உள்ளார். இதை எதிர்பார்த்து காத்திருந்த பாவனா எழுந்து கிச்சனில் சமையல் எண்ணெயை சூடாக்கினார். பின்னர் சூடான எண்ணெயைக் கொண்டு வந்து கணவனின் அந்தரங்க பகுதியில் ஊற்றினார். இதில் அந்த பகுதி 70 சதவீதம் எரிந்துள்ளது. இதையடுத்து மனைவி வீட்டை விட்டு ஓடிவிட்டார்.
வலியால் துடித்த சுனிலை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளார்கள். தகவல் அறிந்ததும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கணவரின் வாக்குமூலத்தின் பேரில் மனைவி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனைவி பாவனவை பொலிஸார் தேடி வருகின்றனர்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago