2026 மார்ச் 07, சனிக்கிழமை

கமலின் கட்சியிலிருந்து மற்றுமொருவர் விலகல்

A.K.M. Ramzy   / 2021 மே 20 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சென்னை:

மக்கள் நீதி மய்யத்தில் முக்கிய நிர்வாகியாக விளங்கிய பொது செயலர் சி.கே.குமரவேல், கட்சியில் இருந்து திடீரென விலகி உள்ளார்.

சட்டசபை தேர்தலில் ம.நீ.ம., தோல்வி அடைந்ததை தொடர்ந்து, அக்கட்சியில் முக்கிய பொறுப்புகளில் இருந்த, மகேந்திரன், சந்தோஷ்பாபு, பத்மபிரியா, முருகானநதம் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகினர்.

இந்நிலையில், ம.நீ., பொதுசெயலாளர் பதவியில் இருந்தவரும், கமலின் வலதுகரமாக விளங்கிய சி.கே.குமரவேலும் கட்சியில் இருந்து விலகி உள்ளார்.

தனி மனித பிம்பத்தை சார்ந்திருக்கிற அரசியலைவிடவும், மதசார்பற்ற ஜனநாயக பாதையில் பயணிக்க விரும்புகிறேன் என தெரிவித்துள்ள குமாரவேல், தேர்தலில், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததற்கு கமலின் அரசியல் ஆலோசகர்களும், அவரது வழிநடத்தலுமே காரணம் என தெரிவித்து உள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .