A.K.M. Ramzy / 2021 ஜூன் 03 , மு.ப. 09:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

சென்னை
மறைந்த கலைஞர் கருணாநிதியின், 97வது பிறந்த நாளையொட்டி, பல்வேறு திட்டப் பணிகளை, முதலமைச்சர் ஸ்டாலின், இன்று(ஜூன் 3) காலை, சென்னை, மெரினா கடற்கரை கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டது.
இதேவேளை, கருணாநிதியின், பிறந்த நாளையொட்டி, அரிசி, கொரோனா நிவாரணத் தொகை, இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் மற்றும் 14 வகையான மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டமும் இன்று காலை ஆரம்பித்து வைக்கப்பட்டன.
ஹிந்து சமய அறநிலையத் துறை சார்பில், கோவில்களில் மாத சம்பளமின்றி பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு, 4,000 ரூபாய் உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 13 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் திட்டமும் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.
மேலும், கொரோனா நோய் தொற்றால் இறந்த, பத்திரிகையாளர்கள் குடும்பத்துக்கு, 10 இலட்சம் ரூபாவும் மருத்துவர், மருத்துவப் பணியாளர்கள், காவலர், நீதிபதிகள்குடும்பத்துக்கு, 25 இலட்சம் ரூபாய் நிவாரணத் தொகையும் வழங்கப்பட்டன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .