A.K.M. Ramzy / 2021 ஜூன் 07 , மு.ப. 10:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருவனந்தபுரம்:
கேரளாவில், மூன்றரைக் கோடி ரூபாய் கறுப்புப் பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில், நடிகர் சுரேஷ் கோபியிடம் விசாரணை நடத்த பொலிஸார் முடிவு செய்துள்ளனர்.
தேர்தல் செலவு சட்டசபை தேர்தலுக்கு சில தினங்களுக்கு முன், இங்குள்ள கொடக்கரா என்ற பகுதியில், ஒரு காரை வழிமறித்து, கொள்ளையர்கள் 25 இலட்சம் ரூபாயை கொள்ளையடித்ததாக புகார் வந்தது. இதுகுறித்து பொலிஸார் நடத்திய விசாரணையில், காரில் இருந்து மூன்றரைக் கோடி ரூபாய் கறுப்புப் பணம் கொள்ளை அடிக்கப்பட்டது வெளிச்சத்துக்கு வந்தது.
இந்த கொள்ளை சம்பவம் குறித்து, மாநில சிறப்பு புலனாய்வு பிரிவு பொலிஸ் விசாரித்து வருகின்றனர். பா.ஜ.,வைச் சேர்ந்தவர்களுக்கு இதில் தொடர்பு உள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த வழக்கில், 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கிடையே, தேர்தல் நேரத்தில் பா.ஜ., தலைவர்கள் மேற்கொண்ட ஹெலிகொப்டர் பயணங்களையும், பொலிஸார் ஆய்வு செய்து வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில், பிரபல மலையாள நடிகரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவரும், ராஜ்யசபா நியமன எம்.பி.,யுமான சுரேஷ் கோபியை, சிறப்பு புலனாய்வு பிரிவினர் விசாரணைக்கு அழைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
12 minute ago
20 minute ago
47 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
20 minute ago
47 minute ago
50 minute ago