Freelancer / 2021 செப்டெம்பர் 28 , பி.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
பஞ்சாப் மாநில காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, தனது பதவியை திடீரென இராஜினாமா செய்துள்ளார்.
ஒரு மனிதன் எப்போது சமரசங்கள் செய்து கொள்கிறானோ அப்போது அவனது நன்மதிப்பும் பாதிப்புக்கு உள்ளாகும். நான் பஞ்சாப்பின் எதிர்காலம் மற்றும் பஞ்சாப்பின் நலனில் என்றும் சமரசம் செய்துகொள்ள மாட்டேன் என்று கட்சியின் தலைவர் சோனியா காந்திக்கு எழுதியுள்ள கடிதத்தில் நவ்ஜோத் சிங் குறிப்பிட்டுள்ளார்.
எனவே, பஞ்சாப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் பதவியை நான் இராஜினாமா செய்கிறேன். நான் தொடர்ந்து காங்கிரஸுக்கு தொண்டாற்றுவேன் என்றும் கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பஞ்சாப் காங்கிரஸில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும் முன்னாள் முதல்வரும் கட்சியின் மூத்த நிர்வாகியுமான அமரீந்தர் சிங்கிற்கும் இடையில் நிலவி வந்த மோதல் போக்கால் அமரீந்தர் சிங், தனது முதல்வர் பதவியை சில நாட்களுக்கு முன்னர் இராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து தற்போது சித்துவும், தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்.
16 minute ago
32 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
32 minute ago
1 hours ago