Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 07, புதன்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 04 , மு.ப. 10:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருச்சியில் காதலனை நம்பிச் சென்ற இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுபற்றி மேலும் தெரியவருகையில், திருச்சி மாவட்டம் சிறுமருதூர் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சிலம்பரசன். இவருக்கும் கல்லூரி மாணவி ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனியாக பேச வேண்டும் என காதலியை சிலம்பரசன் அழைத்துச் சென்று, நண்பனின் வீட்டில் வைத்து பலருடன் சேர்ந்து, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்துள்ளது.
மேலும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதை காணொளியாக எடுத்து வைத்துக் கொண்ட சிலம்பரசன், வார இறுதி நாட்களில் அதை காட்டி மிரட்டித் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்துள்ளான்.
தொடர்ந்து கர்ப்பமடைந்த குறித்த மாணவிக்கு கருக்கலைப்பு மாத்திரைகளையும் சிலம்பரசன் வாங்கி கொடுத்துள்ளான். இந்தச் சம்பவம் தொடர்பாக திருச்சி மாவட்ட பொலிஸ் கண்காணிப்பாளரிடம் தாயுடன் சேர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி புகார் அளித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
23 minute ago
39 minute ago