2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

காதலித்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனை

Editorial   / 2022 ஓகஸ்ட் 29 , பி.ப. 12:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது நண்பரின் திருமணத்துக்கு நாளிதழ் வடிவில் பிளக்ஸ் அமைத்த சம்பவம் திண்டுக்கல், பழனியை அடுத்துள்ள கோதைமங்கலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கோதைமங்கலத்தை சேர்ந்த கவுதம் என்பவர் சென்னையை சேர்ந்த வினிதா என்பவரை கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தார். பின்னர் பெற்றோர் சம்மதத்துடன் இன்று திருமணம் நடைபெற்றது.

இதனை குறிப்பிடும் வகையில் காதலித்த குற்றத்துக்காக பெற்றோர்களால் ஆயுள் தண்டனை என்ற திருமணம் செய்து வைக்கப்படுகிறது என்ற வாசகம் இடம் பெற்றிருந்தது.

மேலும் திருமணம் ஆகாமல் காத்திருக்கும் நண்பர்களின் புகைப்படங்கள், சுயவிபர கோவை விவரம் வெளியிடப்பட்டு மணமகள் இருந்தால் தங்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பழனி மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த இந்த வினோத போஸ்டர் பொதுமக்களை வெகுவாக கவர்ந்தது. 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X