Freelancer / 2024 நவம்பர் 05 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
குஜராத் மாநிலம் - அம்ரேலி மாவட்டம், ரந்தியா கிராமத்தில், சனிக்கிழமை (2), கார் ஒன்றுக்குள் விளையாடிகொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
வீட்டுக்கு அருகே குறித்த 4 சிறுவர்கள் உட்பட 7 சிறுவர்கள் அங்கு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு நின்ற காருக்குள், 4 குறித்த சிறுவர்களும் ஏறி விளையாடினர். கார் கதவுகள் தானாகவே பூட்டிக்கொண்டதால், சிறுவர்களால் கதவை மீண்டும் திறக்கமுடியவில்லை.
இதனால் சிறுவர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
உயிரிழந்த 4 சிறுவர்களும் 2 முதல் 7 வயதுக்கு உட்பட்டவர்கள் ஆவர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026