Freelancer / 2025 ஜூன் 12 , பி.ப. 01:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கப்பல் விபத்தால் காற்று மண்டலம் மாசடைந்து உள்ளதா என்பதை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
பையாம்பலம் பகுதியில் 2 இடங்களில் பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டு, வாயு மாசடைந்து உள்ளதா என மாதிரி சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
குறிப்பாக சல்பர் டை ஆக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகிய அளவு பரிசோதிக்கப்படுகிறது. கப்பலில் தீ எரிந்து கொண்டிருப்பதால், கடல் நீரில் மாசு ஏற்பட்டு உள்ளதா என்பதை கண்காணிக்கவும் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர்.
இதனிடையே சரக்கு கப்பலில் தற்போது தீ கட்டுக்குள் வந்தபோதும் மீண்டும் கரும்புகை எழுந்த வண்ணம் உள்ளது. தீயை கட்டுப்படுத்திய நிலையில் விபத்து ஏற்பட்ட கப்பலை ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும், கப்பலில் இருந்து 20க்கும் மேற்பட்ட கொல்கலன்கள் கடலில் மூழ்கியதாக தகவல் வெளியானதால் அங்கு சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
25 minute ago
53 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
53 minute ago
2 hours ago