2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

காலநிலை இழப்பீடுக்கான உந்துதலை புதுப்பிக்கும் இந்தியா

Freelancer   / 2022 செப்டெம்பர் 18 , பி.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் நவம்பர் மாதத்தில், உலகத் தலைவர்கள் கூடும் ஐக்கிய நாடுகளின் வருடாந்த காலநிலை உச்சிமாநாட்டில், ​​இழப்பீட்டுக்கான உந்துதலைப் புதுப்பிக்க ஏனைய வளரும் நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படுகிறது.

வரலாறு காணாத வெப்பம், பரவலான வறட்சி மற்றும் வெள்ளத்தால் இந்தியா பாதிக்கப்பட்டுள்ளது.

பூமியை வெப்பப்படுத்துவதற்கு வரலாற்று ரீதியாக குறைந்த பங்களிப்பு செய்த பாதிக்கப்பட்ட ஏழை நாடுகளின் காலநிலை பேரழிவுக்கு பணக்கார நாடுகள் பணம் செலுத்த வேண்டும் என்று இந்தியா வாதிட்டது.

கடந்த வருடம் ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடந்த COP26 க்கு முன்னதாக இந்த விடயத்தை இந்தியா செய்திருந்தது.

2009 இல் இடம்பெற்ற காலநிலை மாநாட்டில், 2020 ஆம் ஆண்டுக்குள் வருடாந்தம் 100 பில்லியன்  டொலர் பங்களிப்பதாக உறுதியளித்த பணக்கார நாடுகள், இதுவரை,  20.1 பில்லியன் டொலர் மட்டுமே பங்களித்துள்ளன.

2015 பாரிஸ் காலநிலை ஒப்பந்தம் "இழப்பு மற்றும் சேதத்தை" நிவர்த்தி செய்வதற்கான விடயத்தை உள்ளடக்கியிருந்தாலும், அதில் பல கேள்விகளுக்கு பதிலளிக்கப்படவில்லை.

பெரும்பாலான வளரும் நாடுகளைப் போலன்றி, புவி வெப்பமடைதலுக்கு முக்கிய வரலாற்று பங்களிப்பாளர்களில் இந்தியாவும் ஒன்றாகும்.

2070 ஆம் ஆண்டுக்குள் நிகர பூச்சிய கார்பன் உமிழ்வை அடைய கடந்த ஆண்டு உறுதியளித்ததுடன், அதன் இலக்குகளை அடைய உதவுவதற்காக செல்வந்த தொழில்மயமான நாடுகளிடம் இருந்து இதுவரை 1 டிரில்லியன் டொலரைக் கோரியுள்ளது.

கடந்த மாதம் அதன் தன்னார்வ காலநிலை பொறுப்புகளை புதுப்பித்த அரசாங்கம், தூய்மையான எரிபொருளைப் பயன்படுத்துவதற்கு முற்பதிவு செய்தல் மற்றும் அதன் அசுத்தமான தொழில்களுக்கான கார்பன் வரவு வர்த்தகத் திட்டம் போன்ற நடவடிக்கைகளை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X