2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கு லடாக்: இந்திய- சீன இராணுவங்கள் வாபஸ்

Freelancer   / 2022 செப்டெம்பர் 20 , பி.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிழக்கு லடாக்கின் ரோந்துப் புள்ளி 15க்கு அருகில் உள்ள கோக்ரா ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து இந்திய மற்றும் சீன இராணுவங்களை திரும்பப் பெறும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாக இந்திய அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கிழக்கு லடாக் எல்லையில் குவிக்கப்பட்டுள்ள இந்திய - சீன இராணுவ படைகளை திரும்ப பெற்று எல்லையில் அமைதியை நிலைநாட்ட, இருநாட்டு இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை இடம்பெற்றது.

அதற்கமைய 16ஆவது சுற்றுப் படைத் தளபதி மட்ட பேச்சின் போது இரு தரப்பினருக்கும் இடையிலான கலந்துரையாடலுக்குப் பின்னர் செப்டெம்பர் 8 ஆம் திகதி நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டு கடந்த வாரத்தில் நிறைவடைந்துள்ளது.

இரு படைகளும் தங்கள் தற்போதைய நிலைகளில் இருந்து தத்தமது பக்கங்களை நோக்கி நகர்ந்து, அதன் பின்னர், ஒருவருக்கொருவர் நிலைகளை சரிபார்த்ததாக தெரியவருகிறது.

மேலும், துருப்புக்கள் மற்றும் பிற சொத்துக்களை நிலைநிறுத்திய இடத்தில் இரு தரப்பினராலும் கட்டியெழுப்பப்பட்ட உட்கட்டமைப்பை அகற்றும் செயல்முறையும் இதில் உள்ளடங்கியிருந்தது.

முன்னதாக, ஊடகங்களின் கேள்விக்கு பதிலளித்த வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, செப்டம்பர் 12 ஆம் திகதிக்குள் அப்பகுதியில் இராணுவங்களை திரும்பப் பெறும் நடவடிக்கை முடிவுறும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X