2025 ஜூலை 23, புதன்கிழமை

குங்குமப்பூ விவசாயிகளுக்கான முயற்சிகள் பலனளிக்கும்

Freelancer   / 2022 நவம்பர் 29 , பி.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள ஏராளமான மக்கள் தற்போது பல்வேறு பழமையான தொழில்களில் ஈடுபடுவதன் மூலம் சிறந்த முறையில் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர் என்றும் இது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பின் சங்கிலியை உருவாக்க உதவுகிறது என்றும் ஐஏஎன்எஸ் தெரிவித்துள்ளது.

கடந்த தசாப்தங்களில், பல தொழில்கள் ஏதோ ஒரு காரணத்தால் வீழ்ச்சியடையத் தொடங்கிய போதும், தற்போதைய அரசாங்கம் ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள பல்வேறு தொழில்களில் புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

பல புதிய திட்டங்கள் மூலம் பல அவசர நடவடிக்கைகள் அறிமுகப்படுத்தப்பட்டதன் விளைவாக, மக்கள் பல்வேறு தொழில்களுடன் மீண்டும் இணைக்கத் தொடங்கியுள்ளனர். 

மேலும், அவர்களிடமிருந்து ஒதுங்கியிருந்த மக்களும் திரும்பி வந்து அரசின் திட்டங்களை முழுமையாகப் பயன்படுத்தி வருகின்றனர்.

குங்குமப்பூ தொழில்  

புல்வாமா மாவட்டத்தில் உள்ள பான்பூர் பல நூற்றாண்டுகளாக 'குங்குமப்பூ நகரம்' என்றும் அழைக்கப்படுகிறது.

காஷ்மீரி குங்குமப்பூ அதன் தனித்துவமான அடையாளத்துக்காக உலகம் முழுவதும் பிரபலமானது. ஸ்ரீநகர்-ஜம்மு நெடுஞ்சாலையில் பான்பூரிலிருந்து பார்சா வரையிலான பகுதி ‘சிவப்பு தங்கம்’ பகுதி என்றும் அழைக்கப்படுகிறது.

முந்தைய அரசுகளின் நடவடிக்கைகளால் இத்தொழில் மிகவும் நஷ்டமடைந்ததால், 'தங்கம்' விளையும் இந்த நிலம் தரிசு நிலமாக மாறியது.

கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக 2019க்குப் பின்னர், ஜம்மு காஷ்மீரில் உள்ள பிற தொழில்களுடன் இந்தத் தொழிலிலும் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தியுள்ளது. 

இது பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்ததன் காரணமாக விவசாயிகள் மீண்டும் இங்கு குங்குமப்பூ செய்கைக்கு ஈர்க்கப்படுகிறார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு உற்பத்தி அதிகரிப்பு காணப்படுகிறது. அரசாங்கம் இப்பகுதியை குங்குமப்பூ சுற்றுலாவாக ஊக்குவிக்கிறது, அங்கு சமீபத்தில் ஒரு பெரிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

பல்வேறு வானிலை காரணமாக குங்குமப்பூ பழுதடைந்து, விவசாயிகளின் வருவாயைக் குறைத்தது, இது தொழிலைத் தவிர்ப்பதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்தது.

இருப்பினும், ஷேர் காஷ்மீர் விவசாய பல்கலைக்கழகத்தின் முன்முயற்சியின் காரணமாக, காஷ்மீர் தற்போது குங்குமப்பூவை உட்புறத்தில் வளர்ப்பதில் வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது, இதன் காரணமாக தொழில் விரிவடைந்து விவசாயிகளுக்கு சிறந்த முறையில் பயனளிக்கிறது.

தற்போது இந்த புதிய தொழில்நுட்பம் அதிகளவிலான விவசாயிகளுக்கு தெரிவிக்கப்பட்டு, தொழில் வளர்ச்சி பெறும் என, குங்குமப்பூ ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்த பஷீர் அகமது இலாஹி தெரிவித்தார்.

இவ்வாறு குங்குமப்பூவை வளர்க்க விரும்புபவர்கள் குங்குமப்பூ ஆராய்ச்சி மையத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும் எலாஹி கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .