2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

குடிபோதையில் 30 பெண்கள் ஆபாச நடனம்

Editorial   / 2022 செப்டெம்பர் 12 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

குடிபோதையில் ஆபாச நடனம் ஆடிய, பெண்கள் 30 பேர் பொலிஸாரால் மீட்கப்பட்டு, எச்சரிக்கை செய்து விடுதலை செய்யப்பட்ட சம்பவம் சென்னையில் இடம்பெற்றுள்ளது.

 சென்னையில் இரவு 10 மணிக்கு மேல் பார்களில் மது விருந்து நடத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. மேலும் ஹோட்டல்கள், பார்களில் நடன நிகழ்ச்சி நடத்தவும் தடை உள்ளது.

ஆனால் சென்னையில் பல இடங்களில் பார் வசதியுடன் கூடிய தனியார் விடுதிகளில் தடையை மீறி நள்ளிரவு மது விருந்து மற்றும் அரைகுறை ஆடையுடன் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை அண்ணா சாலையை ஒட்டியுள்ள ராயப்பேட்டை ஜெனரல் பேட்டர்ஸ் சாலையில் பார் வசதிகளுடன் கூடிய தனியார் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் நள்ளிரவில் மது விருந்துகளுடன் பெண்கள் ஆபாச நடனம் மற்றும் குத்தாட்டம் போடுவதாக அண்ணாசாலை பொலிசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

 . இதையடுத்து பொலிஸார் அந்த விடுதியில் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கு 30-க்கும் மேற்பட்ட இளம்பெண்கள் தங்களின் ஆண் நண்பர்களுடன் நடனமாடிக்கொண்டு இருந்தனர். குடிபோதை தலைக்கேறி மதுமயக்கத்தில் இருந்த அந்த இளம்பெண்கள் அங்கு இசைக்கப்பட்ட இசைக்கு ஏற்ப அரைகுறை ஆடையுடன் ஆபாசமாக நடனமாடி குத்தாட்டம் போட்டனர்.

 இதைப்பார்த்த பொலிஸார் உடனடியாக அங்கு இசைக்கப்பட்ட ஆடியோவை நிறுத்தினார்கள். அங்கு மதுபோதையில் சுய நினைவின்றி நடனமாடிய 30 பெண்களையும் பொலிஸார் மீட்டனர். போதையில் இருந்த 30 இளம்பெண்களின் முகவரி, செல்போன் எண்கள் ஆகியவற்றை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை எச்சரித்து ஆட்டோவில் பொலிஸார் பாதுகாப்புடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கு போதையில் இருந்த வாலிபர்களையும் கடுமையாக எச்சரித்து அனுப்பினார்கள். அதன் பிறகு தடை செய்யப்பட்ட நள்ளிரவு நடன மதுவிருந்துக்கு ஏற்பாடு செய்த தனியார் விடுதி உரிமையாளர், மேலாளருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X