Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2024 மார்ச் 14 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னையில் சுமார் 25 லட்ச ரூபா மதிப்புள்ள வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பண்டல் பண்டலாக பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அண்மையில் சென்னையில் பல இடங்களில் எலக்ட்ரோனிக் சிகரெட் இயந்திரம் விற்கப்படுவதாக பொலீசாருக்கு தகவல் கிடைத்த நிலையில், அவை பறிமுதல் செய்யப்பட்டன.
1300 எலக்ட்ரோனிக் சிகரெட் பெட்டிகள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், 6 பேர் கைது செய்யப்பட்டனர். கைப்பற்றப்பட்ட எலக்ட்ரோனிக் சிகரெட்களின் விலை ரூ.3000 முதல் 5 ஆயிரம் வரை இருக்கும் என பொலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுமார் 30 லட்சம் ரூபா மதிப்புடைய எலக்ட்ரோனிக் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இதன் தொடர்ச்சியாக பொலிசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வரும் நிலையில் சென்னை ஆடியப்ப தெருவில் குடோன் ஒன்றில் போதைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக பொலீசாருக்கு இரகசிய தகவல் கிடைத்தது.
அந்த தகவலின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட குடோனில் காவல்துறையினர் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வில் சுமார் 25 லட்சம் ரூபா மதிப்புள்ள 28 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் பண்டல் பண்டலாக அடுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.
இதனை பறிமுதல் செய்த யானைக்கவுனி பொலிசார், குடோன் ஊழியர்கள் இரண்டு பேரை இது தொடர்பாக கைது செய்தனர். மேலும் அவர்கள் கடத்தலுக்கு பயன்படுத்திய கார் ஒன்றையும் பறிமுதல் செய்தனர்.
இந்த வெளிநாட்டு சிகரெட் கடத்தல் தொடர்பாக சாந்தி லால் என்ற நபரை பொலிசார் தேடி வருகின்றனர். S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
12 Jul 2025