Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Freelancer / 2024 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று பரவல் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ள நிலையில், வெளிநாட்டில் இருந்து வருபவர்களை, பரிசோதனை செய்தபிறகே அனுமதிக்க விமான நிலைய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது.
சமீபத்தில், உலக நாடுகளிடையே குரங்கு அம்மை பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச பொது சுகாதார அவசர நிலையை உலக சுகாதார அமைப்பு பிறப்பித்தது.
ஆபிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. சிங்கப்பூரில் கூட, 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, விமான நிலையங்கள், எல்லைகளில் பயணிகளுக்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்று பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்தவும், சிகிச்சை அளிக்கவும் புதுடெல்லியில் மூன்று அரசு மருத்துவமனைகள் தயாராக உள்ள அதேசமயம், இத்தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளை மாநில அரசுகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்கள், துறைமுகங்களிலும், மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் பணியில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், இந்தியாவில் உள்ள 32 ஆய்வகங்களில் குரங்கு அம்மை தொற்று பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப் பட்டுள்ள நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை, 116 நாடுகளில் 99,176 பேர் குரங்கு அம்மை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 208 பேர் உயிரிழந்துள்ளனர் என்று சர்வதேச சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், இந்தியாவில் தற்போது வரை யாருக்கும் குரங்கு அம்மை தொற்று பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago
5 hours ago