2025 ஜூலை 23, புதன்கிழமை

கைலாசாவுக்கு ஆட்கள் தேவை; நித்தி அதிரடி

Ilango Bharathy   / 2022 நவம்பர் 16 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆட்கடத்தல், கொள்ளை, மோசடி, கற்பழிப்பு  உள்ளிட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டு பொலிஸாரால் தேடப்பட்டு வந்த  சாமியார் நித்தியானந்தா, கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தனது சீடர்கள் சிலருடன் தலைமறைவானார்.

இந்நிலையில் தான் இந்தியாவை விட்டு தான் சென்றுவிட்டதாக அறிவித்த அவர், கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாகவும்  அதற்கென தனி வங்கி, நாணயம் என்பன காணப்படுவதாகவும் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் தோன்றி தெரிவித்துவந்தார்.

இந்நிலையில் தற்போது உலகம் முழுவதும் உள்ள  தமது ஆசிரமங்களில் பணியாற்றுவதற்கு ஆட்கள் தேவை என்ற  ஒரு அறிவிப்பொன்றை நித்தியானந்த வெளியிட்டுள்ளார்.

குறித்த அறிவிப்பில் எலட்ரானிக் , பிளம்மிங் பணிகளுக்கும், தூதரக பணிகளுக்கும் ஆட்கள் தேவை எனவும்,  பணியில் சேர்வோருக்கு ஊதியத்துடன் பயிற்சிக்கொடுக்கப்பட்டு நித்தியின் பல்வேறு ஆசிரமங்களில் பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

இவ் அறிவிப்பானது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .