2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

கொண்டம் கேட்பீர்களா மாணவிகளே!

Editorial   / 2022 செப்டெம்பர் 29 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்களுக்கு இலவசமாக கொண்டம் வேண்டுமென நீங்கள் கேட்பீர்கள் என பெண் அதிகாரியொருவர் மாணவிகளிடம் கூறியமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பீகாரில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவரிடம் மாணவிகள் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோ வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், அதிகாரி கவுரை நோக்கி மாணவிகள் சிலர், இலவச நாப்கின்களை அரசு எங்களுக்கு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என கூறியுள்ளனர். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது என்றும் குறிப்பிட்டுள்ளன.

அதனால், ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்களுக்கு அவர்கள் வழங்க முடியாதா? என்றும் கேட்டுள்ளனர்.

இதற்கு அதிகாரி ஹர்ஜோத் கவுர் பதிலளிக்கையில், இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு உண்டா? எனக் கேட்டுவிட்டு,  அரசு ஜீன்ஸ் துணிகளை வழங்கலாம். அழகிய காலணிகளை வழங்கலாம் என நாளைக்கு நீங்கள் கூறுவீர்கள் என்றார்.  

முடிவில், குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச கொண்டம்கள் கூட வேண்டுமென கூறுவீர்கள் எனக் அந்த பெண் அதிகாரி கூறியுள்ளார்.  

ஏன் அரசிடம் இருந்து பொருட்களை எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது? என கேட்டுள்ள கவுர், இந்த எண்ணம் தவறானது என்றும் பேசியுள்ளார்.

இதற்கு பதிலளித்த மாணவிகள், தேர்தலின்போது வாக்குகளை பெற அரசு எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்து வருகின்றன என பதிலடியாக கூறியுள்ளனர்.

அதற்கு கவுர், நீங்கள் வாக்களிக்காதீர்கள். (பாகிஸ்தானை போல) என குறிப்பிட்டு உள்ளார். இதன்பின்பு கவுர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், பெண்களின் உரிமை மற்றும் அதிகாரத்திற்காக கடுமையாக போராடிய நபர்களில் ஒருவர் என அறியப்படும் பெண் நான்.

சில தவறான நபர்கள், அவர்களது தவறான செயல்களுக்காக அவர்களுக்கு எதிராக எங்களது அமைப்பு எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் ஒவ்வொரு விசயத்திலும் தோற்று, துவண்டு போயுள்ளனர். அந்த நபர்கள், என்னுடைய நன்மதிப்புகளை சீர்குலைக்கும் கீழ்த்தர முயற்சிகளில் இதுபோன்று ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X