Editorial / 2021 மே 17 , பி.ப. 12:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்தியா முழுவதும் கொரோனாத் தொற்றுப் பரவலானது பொதுமக்களை வாட்டி வதைத்து வருகின்றது.
இந்நிலையில் அண்மைக்காலமாக கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண்கள் வைத்தியசாலைகளிலும், பிற இடங்களிலும் பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில் இது குறித்த சம்பவமொன்று அண்மையில் கேரளாவில் பதிவாகியுள்ளது.
கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளான பெண்ணொருவர் அம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டபோது அதிலிருந்த உதவியாளர் ஒருவரால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
இச் சம்பவத்தின் போது மோசமான உடல்நிலையில் இருந்ததால் அவரால் இது குறித்து புகார் அளிக்க இயலவில்லை. தற்போது அவர் குணமடைந்திருக்கும் நிலையில் மே 13ஆம் திகதி தனக்கு ஏற்பட்ட பாலியல் துன்புறுத்தல் குறித்து மருத்துவரிடமும் பொலிஸ்நிலையத்திலும் அவர் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த அம்புலன்ஸ் உதவியாளரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச் சம்பவமானது அப் பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிறருக்கு தொற்றை பரப்பிவிடக்கூடிய ஆபத்தில் இருப்பதால் தனியாகவே சிகிச்சைக்குச் செல்ல வேண்டியநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்தாலும் கூட அவர்கள் பெரும்பாலும் உதவிக்கு யாரையும் வைத்துக் கொள்வதில்லை.
இச் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பெண் நோயாளிகளுக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் இடம்பெறும் சம்பவங்கள் இந்தியா முழுவதும் அதிகரித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
5 minute ago
20 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
34 minute ago
44 minute ago