A.K.M. Ramzy / 2021 மே 23 , மு.ப. 10:00 - 0 - {{hitsCtrl.values.hits}}

கோவை
சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தால் கறுப்பு பூஞ்சை தொற்று பாதிக்காதென கோவையைச் சேர்ந்த காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.சொக்கலிங்கம் தெரிவித்துள்ளார்.
‘மியூகோர்மைகோசிஸ்’ (Mucormy cosis) எனப்படும் கறுப்பு பூஞ்சை தொற்று என்பது புதிய தொற்று இல்லை. கொரோனா தொற்று பரவத் தொடங்குவதற்கு முன்பிருந்தே இந்நோய் உள்ளது. குறிப்பாக கட்டுப்பாடற்ற சர்க்கரை அளவு உள்ளவர்கள், எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்ட வர்கள்,இரத்தப் புற்றுநோய் உள்ளவர்கள், தீக்காயங்களால் பாதிக்கப்பட்டவர்கள், உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவதால் இந்த பாதிப்பு ஏற்பட்டு வந்தது. மிகக் குறைவான நபர்களே இந்த பூஞ்சையால் பாதிக்கப்பட்டனர்.
இதுதொடர்பாக கோவை நீலம்பூர் ராயல்கேர் மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் பி.சொக்கலிங்கம் கூறியதாவது: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க அதிகமான ஸ்டிராய்டு மருந்துகள், நோய் எதிர்ப்புத் திறனில் மாறுதல் ஏற்படுத்தக் கூடிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. கொரோனாவின் கூடுதல் வீரியம், அதற்கேற்ப சிகிச்சையின் போது அளிக்கப்படும் மருந்துகள் என இரண்டும் இணைந்து நோய் எதிர்ப்பு திறனை குறைப்பதால், இரண்டாவது அலையில் கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது.
5 minute ago
15 minute ago
20 minute ago
35 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
15 minute ago
20 minute ago
35 minute ago