Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Freelancer / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 04:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
வை.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் திருப்பதி கோயிலில் வழங்கப்பட்ட லட்டுகளில் விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
சந்திரபாபு நாயுடு தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி ஆந்திராவில் அமைந்து 100 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு அக்கூட்டணி சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு அவர் பேசுகையில்,
“கடந்த ஆட்சியின் போது திருப்பதி மலையின் புனிதத்தை கெடுத்து விட்டார்கள். லட்டு பிரசாதம் தயார் செய்ய முழுவதுமாக கலப்படம் செய்யப்பட்ட பொருட்களை பயன்படுத்தி வந்துள்ளனர். குறிப்பாக விலங்குகளின் கொழுப்பு கலக்கப்பட்ட நெய் லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், எங்களது ஆட்சியில் தரமான பொருட்களை பயன்படுத்தி பிரசாதங்கள் தயாரித்து வருகிறோம். கடந்த ஐந்தாண்டுகளில் வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அரசு ஏராளமான முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது. அதற்கு உரிய தண்டனை அவர்களுக்கு கிடைக்கும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இந்நிலையில், புனிதமான கோயில் பிரசாதத்தில் நெய்க்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியின் அரசு மீது சந்திரபாபு எழுப்பியுள்ள குற்றச்சாட்டு ஆந்திரா மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.S
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
32 minute ago
53 minute ago