2025 மே 12, திங்கட்கிழமை

சிந்து நதி நீர் ஒப்பந்தம் இரத்து நீடிக்கிறது

Freelancer   / 2025 மே 11 , பி.ப. 12:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாக்குதலை நிறுத்திய இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளில் முக்கியமானதான சிந்து நதிநீர் ஒப்பந்தம் இரத்து என்ற முடிவை திரும்பப்பெறவில்லை.

இது குறித்து இந்தியா தரப்பில், 

"பயங்கரவாதத்திற்கு முடிவுகட்டுவதில் இந்தியா உறுதியாக இருக்கிறது. ஏப்ரல் 23ஆம் திகதியன்று பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா அறிவித்த நடவடிக்கைகள் அமுலில் இருக்கும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம், அட்டாரி-வாகா எல்லை மூடல், பாகிஸ்தானியர்கள் வெளியேற்றம், சிந்து நதிநீர் ஒப்பந்தம் இரத்து உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் மாற்றம் இல்லை என்று தெரியவந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X