2025 ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை

சிரிப்பால் வென்ற பாட்டிக்கு வீடு

Editorial   / 2022 ஓகஸ்ட் 24 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பு பரிசு பொருட்களை கையில் வைத்துக் கொண்டு பொக்கை வாய் சிரிப்புடன் இருந்த படம் மூலம் பிரபலமானவர், நாகர்கோவிலைச் சேர்ந்த வேலம்மாள் பாட்டி.

இந்தப் படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏழைத் தாய்மார்களின் சிரிப்பே நமது அரசின் சிரிப்பு என கருத்து தெரிவித்து இருந்தார்.   நாகர்கோவிலுக்கு வந்திருந்த முதலமைச்சர்  வேலம்மாள் பாட்டியையும் நேரில் சந்தித்தார்.

அப்போது தனக்கு இலவச வீடும், முதியோர் ஓய்வூதியமும் வழங்க வேண்டும் என வேலம்மாள் பாட்டி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணித்தார்.

அதன்பிரகாரம்,  முதலில் முதியோர் ஓய்வூதியமும், பின்னர் இலவச வீடும் வழங்கப்பட்டது.

அவற்றை பெற்றுக்கொண்ட வேலம்மாள் பாட்டி, மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். எனக்கு இலவச வீடு வழங்கிய முதலமைச்சருக்கு நன்றி. ஏழைகளின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கும் முதலமைச்சரை பாராட்டுகிறேன் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X