Ilango Bharathy / 2023 ஜனவரி 18 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஹரியானா மாநிலம், குருகிராம் - பரிதாபாத் வீதியில் அண்மையில் லொறியொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதியில் போக்குவரத்தைச் சீர் செய்ய வேகமாகச் சென்ற பொலிஸாரின் காரொன்று எதிரே வந்த கார் மீது மோதியுள்ளது.
இவ்விபத்தில், எதிரே வந்தகாரில் பயணம் செய்த 6 வயதான சிறுமியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும், மேலும் ஐவர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்து நிகழ்ந்த போது காரில் பயணித்த மூன்று பொலிஸாரும் குறித்த இடத்தை விட்டுத் தப்பிச்சென்றுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து மூவரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும், இதுகுறித்த மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
15 minute ago
16 minute ago
27 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
16 minute ago
27 minute ago
30 minute ago