2025 ஜூலை 23, புதன்கிழமை

சிறையில் அமைச்சருக்கு மசாஜ்;வீடியோவால் பரபரப்பு

Ilango Bharathy   / 2022 நவம்பர் 21 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறையில் அடைக்கப்பட்டுள்ள ‘ஆம் ஆத்மி‘ கட்சியைச் சேர்ந்த  அமைச்சர் ‘சத்யேந்தர் ஜெயினுக்கு‘ உதவியாளர் ஒருவர் மசாஜ் செய்யும்  வீடியோவொன்று இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயற்படும்  தனியார் நிறுவனமொன்றில் முறைகேடு நடந்ததாகப்  புகார் எழுந்தது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டதில் ஆம் ஆத்மி அமைச்சராக இருக்கும் சத்யேந்தர் ஜெயினிடம் கடந்த 2018ஆம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு சொந்தமான 4.81 கோடி ரூபா மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறையினர் முடக்கினர்.

 பின்பு விசாரணை தீவிரபடுத்தப்பட்ட நிலையில், கடந்த மே மாதம் சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில், சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு உதவியாளர் ஒருவர் மசாஜ் செய்வது போன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை டீற்படுத்தியுள்ளன.

குறித்த வீடியோவில்  படுக்கையில் படுத்து இருக்கும் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் நாற்காலியில் அமர்ந்து கை, கால்களை பிடித்து விடுவது போன்று உள்ளது.

இந்நிலையில் இவ் வீடியோ குறித்து சத்யேந்தர் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதில் சிறைச்சாலை விதிமுறைகளை பின்பற்றியே சத்யேந்தர் ஜெயின் சலுகைகளை பெற்றுள்ளதாகவும், அதில் எவ்வித விதிமீறல்களும் இல்லை எனவும், சந்யேந்தரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .