Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 29 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள ஜம்மு-காஷ்மீர், குஜராத், பஞ்சாப், ராஜஸ்தான், ஹரியானா ஆகிய மாநிலங்களில், வியாழக்கிழமை (29) நடைபெற இருந்த சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி சிவில் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைக்கப்பட்டுள்ளது என ஹரியானா மாநில அரசு புதன்கிழமை அறிவித்தது.
அதனால் ‘ஆபரேஷன் ஷீல்ட்’ ஒத்திவைக்கப்படுகிறது என அம்மாநில அரசு தெரிவித்தது. இது தொடர்பாக அரசு துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சண்டிகர் நிர்வாகமும் பாதுகாப்பு ஒத்திகை ஒத்திவைத்தது குறித்த அறிவிப்பை வெளியிட்டது.
ஹரியானாவில், வியாழக்கிழமை (29) மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 22 மாவட்டத்தில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெறும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு ஒத்திகை நடத்துவது தொடர்பான மாற்று திகதி அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. நிர்வாக ரீதியான காரணங்களுக்காக இந்த ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், பஞ்சாப், குஜராத் மாநிலங்களிலும் ஒத்திகை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
3 minute ago
17 minute ago
29 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
17 minute ago
29 minute ago
31 minute ago