Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2025 ஜனவரி 22 , பி.ப. 01:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் உருவபொம்மையை எரித்து போராடியவர்கள் கைது செய்யப்பட்டனர்.
பெரியார் குறித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சர்ச்சை பேச்சை கண்டிக்கும் வகையில், பெரியார் கூட்டமைப்பு மற்றும் மே 17 இயக்கத்தினர், இன்று (22) காலை அவரது வீட்டை முற்றுகையிடவுள்ளதாக அறிவித்திருந்தனர்.
முன்னதாக இது தொடர்பான சுவரொட்டிகள் சென்னை மாநகர் முழுவதும் ஒட்டப்பட்டிருந்தன. சென்னை - நீலாங்கரையில் உள்ள சீமான் வீடு முன்பாகவும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
இதனிடையே, சென்னை நீலாங்கரையில் முற்றுகையிடும் அமைப்பினருக்கு எதிர்ப்பு தெரிவிக்க சீமான் வீடு முன்பாக ஏராளமான நாம் தமிழர் கட்சியினரும், செவ்வாய்க்கிழமை (21) இரவு முதலே குவிந்திருந்தனர்.
இதனை தொடர்ந்து, நீலாங்கரையில் உள்ள நா.த.க. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டுக்கு பொலிஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் பெரியாரை அவமதித்த சீமானை கைது செய்யக் கோரி, நேற்று (22) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்படி மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் சீமான் வீடு அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். சீமானுக்கு எதிராக கோஷங்களும் எழுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து, சீமான் வீட்டை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகளின் கூட்டமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சீமானின் உருவபொம்மையை எரித்து போராடியவர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதனிடையே, பாதுகாப்புக்காக நாம் தமிழர் கட்சியினரும் ஏராளமானோர் குவிந்ததால் அந்த பகுதியில் பரபரப்பும் பதற்றமும் நிலவியமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
22 minute ago
2 hours ago