2025 ஜூலை 23, புதன்கிழமை

செல்லப் பிராணிகள் வளர்த்தால் 10,000 ரூபாய் அபராதம்

Ilango Bharathy   / 2022 நவம்பர் 15 , மு.ப. 09:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

உத்தரப்பிரதேசம் மாநிலம் நொய்டாவில் , வரும்  ஜனவரி மாதம் 31 ஆம் திகதிக்குள்  மக்கள் தமது நாய், பூனை ஆகிய செல்லப்பிராணிகளைப்  பதிவு செய்ய வேண்டும் என இந்திய விலங்கு நல வாரியத்தின் நொய்டா பிராந்தியம் அறிவித்துள்ளது.

 மேலும் அவ்வாறு பதிவு செய்யாமல் வளர்ப்போருக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது குறிப்பிட்ட காலத்தில் செல்லப் பிராணிகளுக்கு தடுப்பூசி, மற்றும் கருத்தடை சிகிச்சை மேற்கொள்ளவில்லையெனில், மாதந்தோறும் 2,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுமெனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .