A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 07 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
சேலம்
சேலம் மேற்கு தொகுதி வாக்குச்சாவடி மையம் ஒன்றில், வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கான பெட்டிகளுடன் காரொன்று உள்ளே வந்ததால், அங்கு வாக்குப் பெட்டிகளை சீல் வைப்பது நிறுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், பொலிஸாரின் தலையீட்டுக்குப் பிறகு குறித்த கார் திருப்பி அனுப்பப்பட்டது.
சேலம் மேற்கு தொகுதிக்கு உட்பட்ட ஜாகிர் அம்மாபாளையம் அரசினர் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடி மையத்தில் 18 வாக்குச் சாவடிகள் உள்ளன. இங்கு நேற்று இரவு 8 மணி அளவில் வாக்குப்பதிவு முடிவுற்றது. இந்த நிலையில், வாக்குப் பெட்டிகளை சீல் வைக்கும் நடவடிக்கைகள் தொடங்குவதற்கு முன்பாக, வாக்குச்சாவடி மையத்துக்குள் கார் ஒன்று உள்ளே வந்தது.
அதில் வாக்குப்பதிவு இயந்திரங்களை வைக்கும் பெட்டிகள் இருந்ததை அறிந்து, அங்கிருந்த அரசியல் கட்சியின் ஏஜென்டுகள் அறிந்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தேர்தல் அதிகாரிகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறி இந்த காரை அங்கிருந்து நகர விடாமல் முற்றுகையிட்டனர். இந்தத் தகவல் பரவியதை அடுத்து, அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்,வாக்குச்சாவடி மையத்துக்கு வெளியே திரண்டனர். பதற்றமான சூழ்நிலை உருவானதை அடுத்து, வாக்குச்சாவடி மையத்தின் பாதுகாப்புக்காக பொலிஸார் குவிக்கப்பட்டனர்.
15 minute ago
19 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
33 minute ago
42 minute ago