A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 19 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரோடு
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், வடமாநில தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை கடந்துள்ளது. குறிப்பாக சென்னை, கோவை உள்ளிட்ட மாநகரங்களில் கொரோனா தாக்கம் அதிகமாக உள்ளது. தொற்று அதிகரித்து வரும் நிலையில் தொழிற்சாலைகள், கட்டுமானப் பணிகள் உள்ளிட்டவைகளுக்கு அரசு கூடுதல் கட்டுப்பாடு விதிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த ஆண்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டபோது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தினருடன் பல கி.மீ. நடந்தே சென்றனர். இந்த அனுபவத்தால் வடமாநில தொழிலாளர்களில் சிலர் தற்போதே சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர். இதனால் சென்னை சென்ட்ரல், எழும்பூரில் இருந்து பிஹார், லக்னோ, அஹமதாபாத், ஹவுரா உள்ளிட்ட வடமாநிலங்களுக்குச் செல்லும் சிறப்பு ரயில்களில் கூட்டம் அதிகரித்து உள்ளது.
இதுதொடர்பாக ரயில்வே அதிகாரிகள் கூறும்போது, ‘‘தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் தொழிற்சாலைகள், உணவகங்கள், கட்டுமானப் பணிகளுக்கு மீண்டும் கட்டுப்பாடுகள் வந்துவிடுமோ என்ற அச்சம் வடமாநிலத் தொழிலாளர்களிடம் நிலவுகிறது. இதனால் அவர்கள் தங்களது சொந்த மாநிலங்களுக்கு புறப்பட்டுச் செல்கின்றனர். ஆனால், பெரிய அளவில் செல்வதாக தெரியவில்லை’’ என்றனர்.
15 minute ago
19 minute ago
33 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
19 minute ago
33 minute ago
42 minute ago