A.K.M. Ramzy / 2021 ஏப்ரல் 05 , பி.ப. 04:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
சென்னை
தமிழகத்தில் 88,900 வாக்குச்சாவடிகளில் 10,813 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, 530 வாக்குச் சாவடிகள் மிகப்பதற்றமானவை, தேர்தல் பிரசார காலத்தில் பறக்கும்படை, வருமான வரித்துறை மூலம் ரூ.428.46 கோடி மதிப்புள்ள பணம், நகை, பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு கூறியதாவது:
“தமிழகம் முழுவதும் 88,900 வாக்குச் சாவடிகள் உள்ளன. தமிழகத்தில் 50% வாக்குச்சாவடிகள் கண்காணிப்பு கமரா வசதியுடன் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தேர்தலில் 4.17 இலட்சம் பேர் தேர்தல் தொடர்பான பணியில் ஈடுபடடுள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 6.28 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்கள் ஆவர்.
வாக்குச்சாவடிகளை கண்காணிக்க 8014 மைக்ரோ அப்சர்வர்கள் உள்ளனர். அவர்கள் அப்சர்வர்கள் மேற்பார்வையில் கூடுதலாக சென்று நேரடி பார்வையில் பதற்றமான வாக்குச்சாவடிகளை கண்காணித்து தேர்தல் பார்வையாளர்களுக்கு அறிக்கை அளிப்பார்கள். பதற்றமான வாக்குச்சாவடிகள் என 10,813 வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளன. 530 வாக்குச் சாவடிகள் மிகவும் பதற்றமானவை எனக்கண்டறியப்பட்டுள்ளது.
இதில் பழைய எண்ணிக்கை மாற்றமாக வாய்ப்புள்ளது. நேற்றைய 3 மணி நிலவரப்படி 428.46 கோடி மதிப்புள்ள பணம், பரிசுப்பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் பறக்கும்படை, வருமான வரித்துறை உள்ளிட்டோரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதில் ரூ.225.52 கோடி ரொக்கப்பணம், மதுபானங்கள் ரூ 4.61 கோடி, போதை பொருட்கள் 2.21 கோடி, தங்கம் வெள்ளி ரூ.161.11 கோடி, துணி, பரிசு பொருட்கள் ரூ.20.01 கோடி மதிப்புள்ளவைகளும் பிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறு சத்ய பிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
5 minute ago
20 minute ago
28 minute ago
55 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
28 minute ago
55 minute ago