2025 ஜூலை 23, புதன்கிழமை

திருநங்கைகள் கோவிலில் திருமணம் செய்யத் தடை

Ilango Bharathy   / 2022 நவம்பர் 28 , மு.ப. 09:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தில், திருநங்கைகளின் திருமணத்திற்கு கோவில் நிர்வாகம் அனுமதி மறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 நிலன் கிருஷ்ணா என்பவரும்  அத்விகா என்பவரும் சில மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் செய்துகொண்டுள்ளனர். இதனையடுத்து இருவரும் திரு-கச்சம் குறிச்சி கோவிலில் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர்.

இந்நிலையில் இவர்கள் திருநங்கைகள் என்பதால், அவர்களது திருமணத்திற்கு அனுமதி வழங்க குறித்த  கோவில் நிர்வாகத்தினர் மருத்துள்ளனர்.

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர்கள் அவர்களது திருமணத்தை அருகிலுள்ள மண்டபத்தில்  நடத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் இச் சம்பவம் குறித்து கோவில் அதிகாரி ஒருவர் கூறுகையில்,

இதுபோன்ற வழக்கில் சுதந்திரமாக முடிவெடுக்க எங்களுக்கு உரிமை இல்லை என்பதால், அவ்வாறு கூறினோம்.

குறிப்பாக இதுபோன்ற திருமணங்கள் நடப்பதால், சட்டச் சிக்கல்களுக்கு

தாம் முகம் கொடுக்க நேரிடும் என்பதால் மறுப்புத் தெரிவித்தோம் ” என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .