A.K.M. Ramzy / 2021 ஜூன் 02 , மு.ப. 08:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

இன்றைய இளைய தலைமுறை நாளைய துாண்கள். ஆனால், குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்கும் நபர்கள், அதிகரித்து வருகின்றனர். சில நேரங்களில், பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளை வாடகைக்கு அனுப்பும் பெற்றோரும் உண்டு. ஏனெனில், குழந்தைகளைப் பராமரிக்க அவர்களுக்கு பணம் தேவைப்படுகிறது என்றும், நியாயப்படுத்துவார்கள்.
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும், 40 ஆயிரம் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். இதில், பலரும் தெருவில் பிச்சை எடுக்க அனுப்பப்படுகின்றனர். பிச்சை எடுக்கும் குழந்தைகள் மறுவாழ்வு நடவடிக்கை மந்தகதியில் உள்ளது.
பிச்சை எடுக்கும்போது பெண்கள் சுமக்கும் குழந்தைகளின் நிலை அனுதாபத்தைத் துாண்டும் வகையில் இருக்கும். அவர்களில் பெரும்பாலானோர் போக்குவரத்து சிக்னல்களில், பிச்சைகேட்பார்கள்.
குழந்தைகளை கடவுளைப் போல உடையணிவித்து தெருவில் பிச்சை எடுக்க விடுகிறார்கள். உதவி செய்யாவிட்டால் கடவுள் தண்டித்து விடுவாரோ என்ற பயத்தை மக்களிடையே துாண்டிவிடுவதே இவர்களது நோக்கம்.
பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தே வருகின்றது. இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே பலரின் ஆதங்கம்.
பிச்சை எடுக்கும் குழந்தைகள் மறுவாழ்வு அவசியம் குறித்து, முன்னாள் மத்திய அமைச்சர் மேனகா வலியுறுத்தியிருந்தாலும், அத்தகைய குழந்தைகள் மறுவாழ்வு எட்டா துாரத்தில் தான் உள்ளது.
இந்திய தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் கருத்துப்படி, ஒவ்வொரு எட்டு நிமிடங்களுக்கும், ஒரு குழந்தை காணாமல் போகிறது. 25 சதவீதம் பேர் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளனர்.
இந்தியா முழுவதும், மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் போதைப்பொருள், வன்முறை அச்சுறுத்தல்களால் பிச்சை எடுக்க வைக்கப்படுகின்றனர்.இது தொடர்பில் பல்வேறு திட்டங்கள் கொண்டுவந்தும் வெற்றியளிக்கவில்லையெனத் தெரிவிக்கப்படுகிறது.
10 minute ago
15 minute ago
30 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
15 minute ago
30 minute ago
38 minute ago