Freelancer / 2024 செப்டெம்பர் 10 , பி.ப. 01:22 - 0 - {{hitsCtrl.values.hits}}

“நான் மோடியை வெறுக்கவில்லை; ஆனால் அவருடைய கருத்தில் நான் உடன்படவில்லை” என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல் காந்தி, அங்கு பல தரப்பு மக்களுடன் கலந்துரையாடி வருகிறார். இந்த நிலையில், அமெரிக்க சுற்று பயணத்தின்போது ராகுல் காந்தி இந்தியாவுக்கு எதிரான கருத்து தெரிவித்திருப்பதாக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி மீது வெறுப்புணர்வு இருக்கிறதா? என்ற கேள்விக்கு எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.
இதுகுறித்து ஜோர்ஜ்டவுண் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி அளித்துள்ள பேட்டியில் கூறியதை காணொளி காட்சியாக காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் (X) தள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் ட்விட்டர் (X) தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:
“நான் மோடியை வெறுக்கவில்லை. அவருக்கென ஒரு கண்ணோட்டம் உள்ளது. அவருடைய கருத்தில் நான் உடன்படவில்லை. ஆனால், நான் அவரை வெறுக்கவில்லை. அவருக்கென வேறுபட்டதொரு கண்ணோட்டம் உள்ளது, எனக்கென ஒரு மாறுபட்ட கண்ணோட்டம் உள்ளது” என்று கூறியுள்ளார்.S
8 hours ago
8 hours ago
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
17 Dec 2025